Posted by: ramrajya | March 1, 2017

எடப்பாடி பழனிசாமி..மதுவை விலக்குவார்! வைகோ நம்பிக்கை எஸ்.வி.ரமணி.

எடப்பாடி பழனிசாமி..மதுவை விலக்குவார்!  வைகோ நம்பிக்கை

எஸ்.வி.ரமணி.

பரபரப்பான அரசியல் சூழலில் அரசியல் பேசாமல் அமைதியாக இருந்த வைகோ, சட்டப்பேரவையில் ஏற்பட்ட கடும் அமளிக்குப் பின்னர் பேசத்துவங்கினார். “அ.தி.மு.க.வை பற்றி கருத்து சொல்ல விருப்பமில்லை. தி.மு.க. திட்டமிட்டே வன்முறையை அரங்கேற்றி வருகிறது” என தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். கோவையில் நடந்த பொதுக்குழுவுக்கு பின்னர், மதுரைக்கு வந்த வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார்.

 “இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். என் ஊரான கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டுமென்று அங்கு ஊராட்சி மன்றத்தலைவராக இருக்கும் என் தம்பி ரவிச்சந்திரன், ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து கடந்தாண்டு தீர்மானம் போட்டு நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகமோ ஊராட்சி மன்ற தீர்மானத்தை பரிசீலிக்காமல், கடையை மூட மறுத்தார்கள்.

 பிறகு ஊர்மக்கள் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தினார்கள். என் தாயாரும் உண்ணாவிரதம் இருந்தார். சர்க்கரை நோய் பிரச்னையோடு போராட்டத்தில் கலந்து கொண்டதால் தான் எனது தாயார்  அறுபது நாட்களில் இறந்தார். நல்ல விஷயத்துக்கு அவர் உயிர் விட்டதில் மகிழ்ச்சிதான்.

 அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை திட்டமிட்டு கொடூரமாக தடியடி நடத்தியது. கண்ணீர் புகை குண்டுகள் போட்டது, அதன் பின்பு வானத்தை நோக்கி மூன்றுமுறை சுட்டது, அடுத்து என்னை சுடுவதற்கும் தயாரானது. நான் அப்போது வாகனத்தின் மீது ஏறி நின்றேன். என்னை குறிபார்த்து போலிஸ் துப்பாக்கியை பிடித்திருந்த நேரத்தில் தென்மண்டல ஐ.ஜி.முருகன் என்னை காப்பாற்றினார். 

 

அவ்வளவு பெரிய போராட்டத்திற்கு பின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். அப்போது என் மீதும் என் தம்பி மீதும் 307 செக்‌ஷனில் வழக்கு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சொன்னது. அவர்கள் மீதான வழக்கை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஊராட்சி மன்ற தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுங்கள்என்று சொல்லி கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அடைக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம். மகிழ்ச்சியடைந்தோம்.

 ஆனால், சகோதரி ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்ற பிறகு, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது அரசு. இதில் ஓ.பி.எஸ். பின்னணியில் யார் இருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அந்த அப்பீல் மனுவை  முதல் பார்வையிலயே தள்ளுபடி செய்துள்ளனர். இது எனக்கும், எங்கள் ஊருக்கும் கிடைத்த வெற்றி. கலிங்கப்பட்டியை சுப்ரீம் கோர்ட் வரைக்கும் கொண்டு சென்ற ஓ.பி.எஸ்.க்கு நன்றி.

 அப்பீல் செய்த தமிழக அரசை கன்னத்தில் அறைந்துள்ளது சுப்ரீம் கோர்ட்.  இதோடு முடிந்துவிடாது. மதுவுக்கு எதிரான எனது போராட்டம் எப்போதும் தொடரும்….”என்றவரிடம் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுவிலக்கு கொண்டு வருவார் என நம்புவீர்களா என கேட்டோம். “நம்புகிறேன். அதுதான் 500 கடைகளை அடைக்கப்போவதாக சொல்லியிருக்கிறாரே. அவர் முழுமையாக மதுக்கடைகளை அடைப்பார்,” என்றவர், அடுத்த கேள்விக்கு செவி மடுக்காமல் கிளம்பினார்.

 அ.தி.மு.க.வில் நிலவும் சர்ச்சைகளைப் பற்றி பேச மறுப்பவர், யாருக்கும் ஆதரவில்லை என சொல்பவர், எல்லா செய்தியாளர்கள் சந்திப்பிலும் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

வைகோவின் அரசியல் வினோதமாகத்தான் இருக்கிறது. நமக்கும் புரியவில்லை வைகோவின் வழி,தனி வழி.நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: