Posted by: ramrajya | March 7, 2017

கூவத்தூர் விவகாரத்தில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்த ஐஜி, எஸ்பி மாற்றம்

கூவத்தூர் விவகாரத்தில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்த ஐஜி, எஸ்பி மாற்றம்

கூவத்தூர் விவகாரத்தில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்த ஐஜி, எஸ்பி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை. இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வட சென்னை கூடுதல் கமிஷனர் தர், வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த செந்தாமரைக்கண்ணன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு புதிய பதவி வழங்கப்படவில்லை.

 சென்னை தொழில்நுட்பப் பிரிவு ஐஜி சாரங்கன், வடசென்னை கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி மாற்றப்பட்டு, அந்தப்பதவியில் போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வர் சந்தோஷ்கடிமணி நியமிக்கப்பட்டுள்ளார். முத்தரசிக்கும் புதிய பதவி வழங்கப்படவில்லை. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதிமுக இரண்டாக உடைந்தபோது சசிகலா தரப்பு எம்எல்ஏக்களை கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் அடைத்து வைத்திருந்தனர். அவர்களை விடுதியில் இருந்து சுதந்திரமாக வெளியில் அனுப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அப்போது அவர் தற்காலிக முதல்வராக இருந்ததால் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை நேரில் அழைத்து உத்தரவு பிறப்பித்தார்.

 இதற்கிடையில் தமிழக கவர்னரிடமும் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. இதுகுறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகளை கவர்னர் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில், மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணன், தப்பி வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும், அதில் இருந்து தப்பி வந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து போலீசில் புகாரும் தெரிவித்தார்.

 இதனைதொடர்ந்து கூவத்தூர் போலீசார், சசிகலா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின், ஐஜி செந்தாமரைக்கண்ணன், எஸ்பி முத்தரசி ஆகியோர் சொகுசு விடுதிக்குள் போலீசாருடன் நுழைந்து சோதனை போட்டனர். இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 அப்போது எம்எல்ஏக்களுடன் சொகுசு விடுதியில் சசிகலாவும் தங்கியிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 இந்தநிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியை, முதல்வர் பதவி ஏற்கும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். பின் சட்டப்பேரவையில் தனது அரசுக்கான மெஜாரிட்டியை எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்தார். இந்தநிலையில் தற்போது திடீரென்று வடக்கு மண்டல ஐஜி சொந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

 இந்த விவகாரத்தில் டிஜிபி அலுவலகத்தில் உள்ள ஒரு உயர் போலீஸ் அதிகாரிதான், இந்த இரு அதிகாரிகளிடமும் விடுதிக்குள் சோதனை நடத்தவும், வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். அதன்படிதான் அவர்கள் செயல்பட்டுள்ளனர். ஆனால் தற்போது உத்தரவிட்ட அதிகாரிக்கு எந்த மாற்றமும் வரவில்லை. செயல்படுத்திய அதிகாரிகள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 எய்தவன் இருக்க அம்பை நோவது என்ன காரணம்.?நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: