Posted by: ramrajya | March 9, 2017

ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு தமிழகத்தில் 36 இடங்களில் உண்ணாவிரத போராட்டம்.

ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு தமிழகத்தில் 36 இடங்களில் உண்ணாவிரத போராட்டம்.

 மறைந்த முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு, அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் உட்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். மாலை 5.20மணி அளவில் பழரசம் குடித்து உண்ணாவிரதம் முடிக்கப்பட்டது.  போராட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:  தமிழக மக்களின் நீங்காத வடுவாக இருப்பது ஜெயலலிதாவின் மரணம். அந்த மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்று இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

ஜெயலலிதா இறந்தது எப்போது: ஜெயலலிதாவுக்கு அப்படி என்ன சிக்கலான வியாதி இருக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்று வைத்தியம் செய்ய வேண்டும் என்று பலமுறை அவர்களிடம் மன்றாடினோம். ஆனால் அவர்கள் அதை காது கொடுத்து கூட கேட்கவில்லை. மாலை 4.30 மணிக்கெல்லாம் மரணமடைந்து விட்டார் என்று நான் வீட்டில் இருக்கும் போது மாலை 6.30 மணிக்கு சொன்னார்கள்.  நான் சென்றபோது உயிர் பிரியவில்லை என்று சாக்கு போக்கு சொல்லி நேரத்தை கடத்தி 11.30மணிக்கு காலமாகிவிட்டார் என்ற செய்தியை தான் சொன்னார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு ஆல் ரவுண்டர். மருத்துவமனைக்கு நாங்கள் செல்லும்போது அங்கு 7 பேர் இருப்பார்கள். மருத்துவமனைக்கு யார் வந்தாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள். யாருடன் பேசுகிறார்கள் என்பதை பற்றி குறிப்பெடுத்து கொள்வார்கள். 

அவர்கள் எந்த பணியையும் செய்யாத ஆட்களாக இருந்தார்கள். அவர்களை பற்றி விசாரிக்கும் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தான் ஆங்காங்கே ஆட்களை நிறுத்தி வைத்துள்ளார் என்று கூறினர்.  விஜயபாஸ்கர் முதல் குற்றவாளி: அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார், ‘நீதி விசாரணை அமைத்தால் முதலில் ஓபிஎஸ்சை விசாரிக்க வேண்டும்என்று சொல்கிறார். நான் தான் நீதி விசாரணை வேண்டும், அதுவும் சிபிஐ விசாரித்தால் தான் ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள உண்மைகள் நாட்டு மக்களுக்கு தெரிய வரும் என்று சொல்கிறேன். முதலில் என்னை விசாரிக்கட்டும். அங்கு நடந்தவைகளை நான் சொல்கிறேன். உண்மையிலே நீதி விசாரணை நடத்தப்பட்டால் யார் முதல் குற்றவாளியாக இருப்பார் என்றால் அது விஜயபாஸ்கராகத் தான் இருப்பார்.

சதி திட்டம் என்ன?:  சசிகலாவை மீண்டும் ஜெயலலிதா சேர்த்த போது அவர் கொடுத்த மன்னிப்பு கடிதத்திலேயே, அக்காவுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டினார்கள் என்று கூறியுள்ளார். சதி திட்டம் என்றால் அதிமுகவையும், ஆட்சியையும் இவர்களின் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தான். அது தெரிந்ததால் தான் ஜெயலலிதா தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார்.

 முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசுகையில்,‘‘ ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நேர்மையானவர் என்றெல்லாம் மக்கள் நம்பினர். ஆனால் அவரும் ஏன் இப்படி சதிகார கும்பலுக்கு அடிபணிந்துவிட்டார் என்று மக்கள் பதறுகின்றனர். ஜெயலலிதாவுக்கு யூரினரி இன்பெக்‌ஷன் இருந்துள்ளது. ஆனால் அவரது அறிக்கையில் நீர்சத்து குறைபாடு, சுகர் நோய்க்காக அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். காவிரி பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறியுள்ளார். ஓபிஎஸ் இருக்கும் போது அதிகாரிகளை மட்டும் அழைத்து பேசியிருப்பதாக கூறியிருப்பதை யாராவது நம்புவார்களா? எய்ம்ஸ் அறிக்கைக்கும், தமிழக அரசின் அறிக்கைக்கும் நிறைய மாறுபாடுகள் உள்ளன. எய்ம்ஸ் அறிக்கை விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பேசுகையில்,‘‘ ஜெயலலிதா மறைவுக்கு முன்னர் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரிக்கவில்லை. மத்திய அரசும் விசாரணைக்கு உத்தரவிடவில்லை. அப்படி நடந்தால் இந்த சதியில் சிக்குவோர் யார் என்று உங்களுக்கு தெரியும்தான்  என்று கூறினார். எப்படியோ உண்மை வெளிவந்தால் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள். நன்றி,வணக்கம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: