Posted by: ramrajya | March 15, 2017

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பன்னீர்செல்வம் நல்லது செய்வார் எனக் கூறுகிறார்கள்.எஸ்.வி.ரமணி.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பன்னீர்செல்வம் நல்லது செய்வார் எனக் கூறுகிறார்கள்.எஸ்.வி.ரமணி.

ஆர் கே நகர் இந்தத் தொகுதி கடந்த 2015-ம் ஆண்டு இடைத்தேர்தலிலும், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியாகும். அ.தி.மு.க-வுக்கு அதிக சதவிகித வாக்குகள் உள்ள தொகுதியானாலும் கூட, சென்டிமென்டாக இந்த தொகுதியில் போட்டியிட்டு, ஜெயலலிதா ஒரு ஆண்டுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.கடந்த டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அ.தி.மு.க-வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிருபிக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தீவிரமாக உள்ளனர். மற்றொரு பக்கம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஆர்.கே.நகரில் களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கும் சூழலைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியான தி.மு.க ஆர்.கே. நகர் தொகுதியை தங்கள்வசப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து காய் நகர்த்தி வருகிறது. மக்கள்நலக் கூட்டணியோ ஆர்.கே. நகரில் போட்டியிடுவது பற்றி இதுவரை முடிவை அறிவித்ததாகத் தெரியவில்லை. விஜயகாந்த், தனது தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து தானும் களத்தில் உள்ளேன்என்று உறுதி செய்துள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில், ஆர்.கே. நகரில் வெற்றி யாருக்கு என்பதை விடவும், வெற்றிக்கு அடுத்த இடத்தை அ.தி.மு.க-வில் எந்த அணி பிடிக்கப்போகிறது என்பதே இப்போதைய பரபரப்பாக உள்ளது. அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்கள் பெரும்பாலும் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கிறார்கள் என்பதே கிரவுண்ட் ரியாலிட்டி. ஓ.பன்னீர் செல்வமோ, எப்படியும் தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கா, அல்லது ஓ.பி.எஸ் அணிக்கா என்பதை தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும்.

இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும், கட்சியில் சிலர் இல்லை என்பதால் வாக்குகள் சிதறாது எனவும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வரும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் போட்டியிட நிறைய பேர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, தன்னை எதிர்த்து தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட சிம்லா முத்துச் சோழனை 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்

அந்த தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களுடைய தற்போதைய மனநிலை என்ன என்பது குறித்து தொகுதி மக்களைச் சந்தித்துப் பேசிய பத்திரிக்கையாளர்களிடம் ஒருவர் கூறுகையில்,

அ.தி.மு.க-வில் பல குழப்பங்கள் இருக்கின்றன. இதில் வருகிற தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே தெரியவில்லை. ஏற்கெனவே ஜெயலலிதா முன்னிறுத்தி விட்டுச் சென்றவருடைய சார்பில் நிறுத்தப்படுகிற  வேட்பாளர்களை விரும்புகிறோம். அதாவது பன்னீர்செல்வம் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறோம்.” என்றார்.

நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.நன்றி,வணக்கம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: