வருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா? எஸ்.வி.ரமணி..

பத்திரிகை செய்திகள்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த 7–ந் தேதி அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த அதிரடி சோதனை சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் வீடு, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமியின் வீடு ஆகிய இடங்களிலும் அப்போது சோதனை நடந்தது. 8–ந் தேதி அன்றும் இந்த சோதனை நீடித்தது.

சோதனை அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.6 கோடி ரொக்கப்பணமும், பல முக்கியமான ஆவணங்களும் சிக்கியதாக தெரிய வந்துள்ளது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் கொடுத்ததற்கான ஆவணமும் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மீது வருமானவரித்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும் என்று ஏற்கனவே வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று பகல் 12 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் புகார் மனு அடங்கிய கவர் ஒன்றை, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு சென்றார். கமி‌ஷனரின் நேர்முக உதவியாளர் புகார் மனு அடங்கிய கவரை பெற்று, போலீஸ் கமி‌ஷனர் கரன் சின்காவிடம் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த புகார் மனுவில், ‘அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது, பெண் அதிகாரி உள்பட வருமானவரித்துறை அதிகாரிகள் மிரட்டப்பட்டதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை அழித்ததாகவும், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரத்குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருமானவரித்துறை சார்பில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த புகார் மனுக்கள் பெறப்பட்டதை கமி‌ஷனர் அலுவலக உயர் அதிகாரிகள் யாரும் உறுதிசெய்யவில்லை. போலீஸ் கமி‌ஷனர் கரன் சின்காவை செல்போனில் தொடர்பு கொண்டபோது, ‘அவரும் போனை எடுத்து பேசவில்லை’. ஒரு சில நிருபர்களிடம் போனை எடுத்து பேசிய கமி‌ஷனர் கரன் சின்கா, அமைச்சர்கள் மீது கொடுத்த புகார் மனு பற்றி பதில் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், புகார் மனு கொடுக்கப்பட்டதை வருமான வரித்துறை வட்டாரத்தில் உறுதி செய்யப்பட்டது.

3 அமைச்சர்கள் மீதான இந்த புகார் மனு மீது சென்னை நகர போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது பற்றி இனிமேல் தான் தெரிய வரும்.

கையில் அதிகார பலம் உள்ளது என்பதற்காக அமைச்சர்கள்,வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டலாமா?காலம் பதில் சொல்லும். நன்றி,வணக்கம்.

Advertisements

நாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை

ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை மக்களின் குறைத்தீர்க்க உடனுக்குடன் தீர்க்க இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்காக முதல் முறையாக இந்தியாவிலேயே எங்கும் இல்லாத நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் 108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடப்பட்டது. அதை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார். 

அந்த அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து மாஃபா பாண்டியராஜன் தெரிவித்ததாவது, 108 அம்சங்களில் 3 அம்சங்கள் பொதுவானதாகும். அவற்றில் ஒன்று ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இரண்டாவது, போயஸ் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும். மூன்றாவது, அதிமுகவையும், இரட்டை இலையையும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மீட்பது ஆகும். இதை தவிர்த்து மீதமுள்ள 105 அம்சங்கள் ஆர்.கே.நகருக்கானதாகும். அவற்றுள் மிக முக்கியமானது நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் ஆகும். கணினி பொருத்தப்பட்ட வேன்கள் தொகுதிகளில் வரும். அதில் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். பின்னர் அது புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு குறைகள் தீர்க்கப்படும். இந்த திட்டம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை. தரமான சாலை , குடிநீர் அமைக்கப்படும். 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும் எழில் நகரில் சுற்றுலா மையம் அமைக்கப்படும். இதில் தொழில்பூங்காக்கள், உணவு மையங்கள், நீருற்றுகள் உள்ளிட்ட ஏற்படுத்தப்படும். சென்னையிலேயே தொழில்பூங்கா இல்லாத தொகுதி ஆர்.கே.நகர் தொகுதிதான். அங்கு சேத்துபட்டில் ஜெயலலிதா தொடங்கியதை போன்ற தரமுள்ள பூங்கா அமைக்கப்படும். மக்களுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கும் வகையில் மொபைல் ஆப்கள் (செயலிகள்) அமைக்கப்படும். ஆர்.கே.நகரில் இரு உயர்நிலைப்பள்ளிகளும், 1 மேல்நிலைப்பள்ளிகளும் உருவாக்கப்படும். தடையின்றி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் பயிற்சி அளித்து வேலைவாயப்புகள் உருவாக்கித் தரப்படும். சுகாதாரமான மருத்துவம், மருத்துவர்கள் இல்லாத பற்றாக்குறை களையப்படும். சாக்கடைகள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். ஆர்.கே.நகரில் உள்ள அரசுக் கல்லூரி உலக தரம் வாய்ந்ததாக மாற்றப்படும். கொடுங்கையூரில் குப்பை மேடு சீர்படுத்தப்படும். பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படும். காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும். ஆர்.கே.நகரில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி. பயோ பூங்காக்கள், தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். பொதுத்துறை வங்கிகள், நூலகங்கள் அமைக்கப்படும் இந்த தேர்தல் அறிக்கைகள் மூலம் ஆர்.கே.நகர் தொகுதி முன்மாதிரி தொகுதியாக விளங்கும் என்றார் மாஃபா பாண்டியராஜன்.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி நடந்து கொண்டால் மக்கள் மனதில் அழியாத இடத்தைப் பெறுவார் ஒ.பி.எஸ். நன்றி,வணக்கம்.

 

குல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.

குல்லாபோட்ட நவாப்பு செல்லாது உன் ஜவாப்பு… தினகரன் தேர்தல் அறிக்கையும் வாக்காளர்களின் பாட்டும் அதிமுக அம்மா கட்சியின் ஆர்.கே. நகர் வேட்பாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையைப் பார்த்து வாக்காள பெருமக்கள் குல்லாபோட்ட நவாப்பு செல்லாது உன் ஜவாப்பு என்ற பாடலைப் பாடி கிண்டலடித்து வருகின்றனராம். 

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக அம்மா கட்சியினர் நேற்று வெளியிட்டனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். எதிரணியான அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான அதிமுக அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக் கொண்டார். 

 இந்த தேர்தல் அறிக்கையில், ஆர்.கே.நகருக்கான பல்வேறு திட்டங்களை கூறியிருக்கிறார்கள் அம்மா கட்சியினர். அதில், குறிப்பாக வீடற்ற 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

57 ஆயிரம் வீடுகள் கட்டித் தர ஆர்.கே. நகர் தொகுதியில் எங்கே இருக்கிறது இடம் என்று கேள்வி எழுப்புக்கின்றனர் வாக்காள பெருமக்கள். மேலும் வீடு கட்டித் தருகிறோம் என்று சென்னையில் வாழும் மக்களை சென்னைக்கு வெளியே தூக்கி கிடாசும் வேலையைத்தான் தினகரன் செய்வார் என்று தொகுதி மக்கள் புலம்புகின்றனர். 

 அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், 10 நடமாடும் மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்றும் அதிமுக அம்மா கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் மற்றும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மாசு இல்லாமல் நவீன மயமாக்கப்படும் என்றும் உறுதி வழங்கப்பட்டுள்ளது. 

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை அங்கிருந்து மாற்ற வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதனை மாற்றுவதற்கான முயற்சிகள் குறித்து தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை. பலவிதமான தொற்று நோயாலும், சுவாசக் கோளாறாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு குப்பைக் கிடங்கை மாற்ற வழி சொல்லாமல் நவீனப்படுத்தி அங்கேயே வைத்துக் கொள்வதில் என்ன லாபம் இருக்கிறது என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையில் புதிய மீன் அங்காடி அமைக்கப்படும் என்றும் எண்ணூர் -மணலி சாலையில் ரூ.117 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசு மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும், வாரந்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

டிடிவி தினகரன் என்ன சொன்னாலும் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் நம்பத் தயாராக இல்லை என்கிறார்கள். நல்லதோ கெட்டதோ அதிமுகவுக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று சொல்லும் பெரும்பாலான ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்கள் கூட, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் வாக்களிப்பதில்லை என்று முடிவுசெய்துள்ளனராம். 
 

நல்ல முடிவு எடுத்திருக்கும் ஆர்.கே.நகர் மக்களுக்கு நமது வாழ்த்துக்கள். நன்றி,வணக்கம்.

Posted by: ramrajya | March 27, 2017

கமல்ஹாசன் மகாபாரதத்தை குறை கூறுவதை விட்டுவிட்டு,தன வாழ்க்கையை திரும்பிப் பார்த்து,திருந்த வேண்டும்.

 

 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது

முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் அ.தி.மு.க. செயல் பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று இரண்டு அணியினரும் டெல்லி சென்று தலைமை தேர்தல் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும், சசிகலா தரப்பினரையும் நேற்று நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் கமிஷன், அவர்கள் தெரிவித்த கருத்துகள் பற்றி நீண்ட நேரம் ஆலோசித்தது.

பின்னர், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கோ ஒதுக்குவது இல்லை என்றும், அந்த சின்னத்தை முடக்கி வைப்பது என்றும் முடிவு செய்தது.

இந்த தகவல் நேற்று இரவு 11 மணிக்கு இரு அணியினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரை இரு அணியினரும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.

இரு அணியினரும் தாங்கள் எந்த பெயரால் அழைக்கப்படவேண்டும் என்பதை இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், சுயேச்சை சின்னங்களில் இருந்து ஏதாவது மூன்றை குறிப்பிட்டு அதில் ஒரு சின்னத்தை இன்று காலை பெற்றுக்கொள்ள்லாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அம்மாவின் மறைவுக்குப்பின் அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் நிலையைக்கண்டு உண்மையான தொண்டர்கள் மனம் வருந்துகிறார்கள்.நன்றி,வணக்கம்.

இரட்டை இலையும்,ஓபிஎஸ் தலைமைக்கு ஆதரவாக 6,000 பிரமாண பத்திரங்களும். எஸ்.வி.ரமணி.

பத்திரிகை செய்திகள்.

ஆர்.கே.நகர்! இடைத்தேர்தல்.அ.தி.மு.க-விலிருந்து தினகரன், தி.மு.க-விலிருந்து மருது கணேஷ், பி.ஜே.பி-யிலிருந்து கங்கை அமரன் போட்டியிடுகின்றனர். ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மதுசூதனன் நிறுத்தப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தீபாவின் கணவர் தனியாக கட்சியொன்றைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஆர்.கே. நகர் தொகுதியை மையமாக வைத்தே அத்தனைக் கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றன. இவர்களைத் தவிர்த்து, சுயேட்சை வேட்பாளர்கள் சிலரும் வித்தியாசமான முறையில் இந்தத் தொகுதியில் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தவண்ணம் இருக்கின்றனர்.

அதிமுகவில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் நீக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமைக்கு ஆதரவாக சுமார் 43 லட்சம் பேரின் கையொப்பம் அடங்கிய 6,000 பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலைக்கு அதிமுகவைச் சேர்ந்த சசிகலா தலைமையிலான அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் உரிமை கொண்டாடி வருகின்றன. எதிர்வரும் சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் “இரட்டை இலைசின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் என்று இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் நேரில் வலியுறுத்தினர்.

இதையடுத்து, இரு தரப்பும் திங்கள்கிழமை (மார்ச் 20) மாலை 4 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சசிகலாவுக்கும், அவரது தலைமைக்கு எதிராக புகார் தெரிவித்த மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயனுக்கும் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. இருப்பினும், இந்தக் கடிதத்துக்கு பதில் அளிக்க இரு தரப்பிலும் ஒரு நாள் கூடுதலாக அவகாசம் கோரப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்பதாகக் கூறி அதிமுகவைச் சேர்ந்த சுமார் 43 லட்சம் பேர் கையொப்பமிட்ட 6,000 பிரமாண பத்திரங்கள், தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் மூலம் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினரில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்கும் தொண்டர்கள், கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோரின் கையொப்பம் மாவட்ட அளவில் சேகரிக்கப்பட்டு, இந்தப் பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், மாநிலம் தழுவிய அளவில் சுமார் 60 லட்சம் தொண்டர்கள் எழுத்துப்பூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமைக்கு ஆதரவாகக் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவை தொகுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அடுத்து வரும் நாள்களில்அதிமுக தேர்தல் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக இரு தரப்பையும் புதன்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நேரில் அழைத்து விசாரணை நடத்துவார் என்றும் அதன் முடிவில் சின்னம் ஒதுக்கீடு குறித்து ஆணையம் முடிவு செய்யும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நியாயமான முறையில்.இரட்டை இலைச்சின்னம் ஓபீஸ் அதிமுக அணிக்கே ஒதுக்கப்படவேண்டும். ஆணையத்தின் முடிவை ஆண்டவன்தான் அறிவார்.நன்றி,வணக்கம்.

எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவிற்காக பாடுபடும் மதுசூதனன் ஆர்கே நகரில் வெற்றி பெறுவது உறுதி..எஸ்வி.ரமணி.

ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அதிமுக சார்பில் வேட்பாளராக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் பெயரை நேற்று  மாலை ஓ.பி.எஸ் தனது வீட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார்.

ஜெயலலிதா மரணமடைந்ததால், ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் 3 அணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் மதிவாணன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு எழுந்தது. வேட்பாளரை தேர்வு செய்ய ஓபிஎஸ் வீட்டில் மதுசூதனன் தலைமையில் ஆட்சிமன்ற குழு கூடி ஆலோசனை நடத்தியது.

ஆலோசனைக்குப்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஆர்.கே. நகரில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

மதுசூதனன் ஜெயலலிதாவிற்காக ஆர்.கே. நகரில் கடந்த இரண்டு முறை மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் ஆர்.கே. நகர் தொகுதியில் 1991 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அப்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார். ஓபிஎஸ் அணியில் போட்டியிடும் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், தான் இந்த மண்ணின் மைந்தன் என்றும் தனக்கு வெற்றி நிச்சயம் என்றும் கூறினார்.

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அதிமுக கட்சிக்காக அயராது பாடுபடும் மதுசூதனனை வெற்றி பெறச்செய்யவேண்டியது ஆர்கே நகர் மக்களின் கடமையாகும். நன்றி,வணக்கம்.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பன்னீர்செல்வம் நல்லது செய்வார் எனக் கூறுகிறார்கள்.எஸ்.வி.ரமணி.

ஆர் கே நகர் இந்தத் தொகுதி கடந்த 2015-ம் ஆண்டு இடைத்தேர்தலிலும், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியாகும். அ.தி.மு.க-வுக்கு அதிக சதவிகித வாக்குகள் உள்ள தொகுதியானாலும் கூட, சென்டிமென்டாக இந்த தொகுதியில் போட்டியிட்டு, ஜெயலலிதா ஒரு ஆண்டுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.கடந்த டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அ.தி.மு.க-வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிருபிக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தீவிரமாக உள்ளனர். மற்றொரு பக்கம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஆர்.கே.நகரில் களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கும் சூழலைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியான தி.மு.க ஆர்.கே. நகர் தொகுதியை தங்கள்வசப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து காய் நகர்த்தி வருகிறது. மக்கள்நலக் கூட்டணியோ ஆர்.கே. நகரில் போட்டியிடுவது பற்றி இதுவரை முடிவை அறிவித்ததாகத் தெரியவில்லை. விஜயகாந்த், தனது தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து தானும் களத்தில் உள்ளேன்என்று உறுதி செய்துள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில், ஆர்.கே. நகரில் வெற்றி யாருக்கு என்பதை விடவும், வெற்றிக்கு அடுத்த இடத்தை அ.தி.மு.க-வில் எந்த அணி பிடிக்கப்போகிறது என்பதே இப்போதைய பரபரப்பாக உள்ளது. அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்கள் பெரும்பாலும் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கிறார்கள் என்பதே கிரவுண்ட் ரியாலிட்டி. ஓ.பன்னீர் செல்வமோ, எப்படியும் தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம், சசிகலா அணிக்கா, அல்லது ஓ.பி.எஸ் அணிக்கா என்பதை தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும்.

இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும், கட்சியில் சிலர் இல்லை என்பதால் வாக்குகள் சிதறாது எனவும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வரும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் போட்டியிட நிறைய பேர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, தன்னை எதிர்த்து தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட சிம்லா முத்துச் சோழனை 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்

அந்த தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்? அவர்களுடைய தற்போதைய மனநிலை என்ன என்பது குறித்து தொகுதி மக்களைச் சந்தித்துப் பேசிய பத்திரிக்கையாளர்களிடம் ஒருவர் கூறுகையில்,

அ.தி.மு.க-வில் பல குழப்பங்கள் இருக்கின்றன. இதில் வருகிற தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே தெரியவில்லை. ஏற்கெனவே ஜெயலலிதா முன்னிறுத்தி விட்டுச் சென்றவருடைய சார்பில் நிறுத்தப்படுகிற  வேட்பாளர்களை விரும்புகிறோம். அதாவது பன்னீர்செல்வம் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறோம்.” என்றார்.

நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.நன்றி,வணக்கம்.

 

குஜராத்தி என்ற பெருமை மோடிக்கு இருக்கலாம்,அதைப்போல் திராவிடன் என்பதில் எனக்கும் இருக்கிறது என்று சொல்லும், கமல்ஹாசன்.

குஜராத்தி என்பதில் மோடிக்கு இருக்கும் பெருமை, திராவிடன் என்பதில் எனக்கும் இருக்கிறது என்று சொல்லும், கமல்ஹாசன். திராவிடம் என்ன மொழி என்று சொல்வாரா?

திராவிடத்தை எதுவும் செய்ய முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிட சித்தாந்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். உணர்வும் இருக்கும். அதை கெட்டிக்காரத்தனமாக, நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளும் கட்சிகள் வென்றே தீரும். தேசியக் கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்தால் திராவிடத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அது ஒரு மொழியைப் போல. நம் இன மானம் அது. குஜராத்தி என்பதில் மோடிக்கு இருக்கும் பெருமை, திராவிடன் என்பதில் எனக்கும் இருக்கிறது. என்கிறார்  கமல்ஹாசன்

தேசியக் கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்தால் திராவிடத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று கூறும், கமல்ஹாசன் திராவிடம் என்றால்என்னவென்றுஅறியாதவராகஇருக்கிறார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,

மலையாளம்,துளு ஆகிய ஐந்து மொழிவாரி மாநிலங்கள் அடங்கிய பகுதிதான் திராவிடம். மற்ற மாநிலத்தவர்கள் திராவிடத்தை ஏற்றுக்கொள்ள அன்று முதல் இன்று வரை தயங்குகிறார்கள்.குஜராத்தி என்ற பெருமை மோடிக்கு இருக்கலாம்,அதைப்போல் கமல் ஹாசனுக்கு தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் பெருமை வேண்டும். தமிழன் என்று சொல்லடா,தலை நிமிர்ந்து நில்லடா என்று அவர் முழக்கமிடவேண்டும்.

அன்றைய திராவிட இயக்கங்களின் சித்தாந்தம்,பார்ப்பான் ஒழிக,இந்துக்கடவுள்கள் ஒழிக,வடநாட்டு ஆதிக்கம் ஒழிக,இந்தி ஒழிக.இந்த  மொழி இன வேற்றுமையை பரப்பியே திராவிடக்கட்சிகள் அன்று வளர்ந்தன.

1950 ஆம் ஆண்டுகளில்,சிலபுச்செல்வர் ம.பொ.சி. தமிழகமெங்கும்,திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தினார். தமிழ் அறிஞர்கள், தெ.பொ..மீனாட்சி சுந்தரனார்,நாமக்கல் கவிஞர், முத்துராமளிங்கத் தேவர்  போற பெரியோர்களெல்லாம்,திராவிட இயக்கத்தாரின் அனாச்சார சித்தாந்தங்களை எதிர்த்து பட்டி,தொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.

அடைந்தாள் திராவிட நாடு,இல்லையேல் சுடுகாடு என்று சொன்னவர்கள்,திராவிட நாட்டு கொள்கையையே ஓரங்கட்டி விட்டார்கள்.

திராவிட சித்தாந்தங்களை பல பெரியோர்கள் பேசி ஓய்ந்து விட்டார்கள்.ஆகவே கமல்ஹாசன்,மற்ற மாநிலத்தவர்களைப்போல்,தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்கட்டும். நன்றி,வணக்கம். https://youtu.be/Rrvi6Ws0HXM

பாஜகவின் இமாலய வெற்றி. எஸ்.வி.ரமணி.

ஐந்து மாநிலத  தேர்தலில், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்டில், பா.ஜ., வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. குடும்பச் சண்டையால் சிக்கலில் இருந்த முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி வீழ்ந்தது. பஞ்சாபில், 10 ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநில சட்ட சபைகளுக்கு, பிப்., 4 முதல், மார்ச் 8 வரை, பல கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேசத்தில், ஆளும் சமாஜ்வாதி கட்சியை வீழ்த்தி, பா.ஜ., இமாலய வெற்றியை பெற்றது.

மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், தனிப் பெரும்பான்மைக்கு, 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பா.ஜ., 312 இடங்களில் வென்று, புதிய சாதனையை படைத்துள்ளது. கூட்டணி கட்சிகள் வென்ற தொகுதிகளுடன் சேர்த்து, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 324 தொகுதிகளில் வென்றுள்ளது

.உத்தரகண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள, 70 தொகுதிகளில், 57 தொகுதிகளில் வென்று, பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது. இங்கு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, 11 இடங்கள் கிடைத்துள்ளன. முதல்வர் ஹரீஷ் ராவத், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

பஞ்சாபில், 10 ஆண்டுகளுக்குப் பின், காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்த முள்ள, 117 தொகுதிகளில், 77 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது.

மூன்று மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது என்பது உறுதியான நிலையில், மணிப்பூர் மற்றும் கோவாவில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக் காததால் இழுபறி ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மணிப்பூரில், காங்கிரஸ் கட்சி, 28 தொகுதிகளி லும், பா.ஜ., 21 தொகுதிகளிலும் வென்றுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக இல்லாத நிலையில் இருந்த, பா.ஜ., அசாமில் ஆட்சி அமைத்த பிறகு, தற்போது மணிப்பூரிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இருப்பினும் அங்கு ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை, தேர்தலில் வென்றுள்ள, 10 இதர கட்சி, எம்.எல்.ஏ.,க்களின் முடிவைப் பொறுத்தே அமையும்.மணிப்பூரில், ராணுவத்துக்கான அதிகாரத்தை எதிர்த்து, 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த, சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா, தோல்வியடைந்தார்.

முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தலைமையி லான, பா.ஜ., ஆட்சிஅமைந்துள்ள கோவாவி லும், இழுபறி நிலையே உள்ளது. மொத்த முள்ள, 40 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி, 17 தொகுதிகளிலும், பா.ஜ., 13 தொகுதிகளிலும் வென்றுள்ளன. மணிப்பூரை போலவே, இங்கும், தேர்தலில் வென்றுள்ள, இதர கட்சிகளை சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்களே, அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக உள்ள னர். முதல்வர் பர்சேகர், இந்தத் தேர்தலில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்ட மாக கருதப்படும், உ.பி., உள்ளிட்ட மாநிலங் களில் பா.ஜ., பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பா.ஜ.,வினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல் திட்டங்கள் மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷாவின் திட்டமிட்ட தேர்தல் வியூகங்களுமே, இந்த வெற்றியை உறுதி செய்ததாக கட்சியினர் கொண்டாடுகின்றனர்.

மோடி அலையைத் தாண்டி, தற்போது, மோடி சுனாமி தாக்கியுள்ளது’ என, தேர்தல் வெற்றி குறித்து, பா.ஜ.,வினர் குறிப்பிடுகின்றனர்.


உத்தர பிரதேசத்தில், 2002க்குப் பின், மீண்டும், பா.ஜ., ஆட்சி அமைய உள்ளது. வனவாசம் முடிந்துவிட்டது, ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள்என, பிரசாரத்தின்போது, மோடி கூறியிருந்தார். மாநிலத்தில், கடந்த, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பா.ஜ., மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

பாஜகவின் இமாலய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மோடியை பாரட்டவேண்டியதுஅனைவரின்கடமையாகும்.

நன்றி,வணக்கம்.  

« Newer Posts - Older Posts »

Categories